Posts

காரசாரமான... குட்டநாடன் மீன் குழம்பு

Image
ஆந்திராவைப் போலவே கேரள உணவுகளும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் கேரளாவில் மீன் குழம்பு தான் மிகவும் பிரபலமானது. அதிலும் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம்.  சரி, இப்போது அந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  மீன் - 1 கிலோ  புளி (குடம்புளி) - 4 துண்டுகள்  உப்பு - தேவையான அளவு  தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்  கடுகு - 1/2 டீஸ்பூன்  வெந்தயம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிது  சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)  பூண்டு - 6-7 (நறுக்கியது)  இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது) காஷ்மீரி மிளகாய் தூள் - 1-2 டேபிள் ஸ்பூன்  மல்லித் தூள் - 1 டீஸ்பூன்  மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் செய்முறை:  முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குட...

பீன்ஸ் உசிலி செய்ய தெரிந்து கொள்வோம்....

Image
தேவையானப்பொருட்கள்: பீன்ஸ் - 1/4 கிலொ (நீளவாக்கில் நறுக்கியது) துவரம் பருப்பு - 1/2 கப் கடலைப் பருப்பு - 1/2 கப் காய்ந்த மிளகாய் - 3 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் சாம்பார் தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்) எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை நன்றாகக் களைந்து, நீரை  வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக மசால் வடைக்கு  அரைப்பது போல அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை  வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள பீன்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, சிறிது  நீரைத் தெளித்து வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்...

சிக்கன் தால் ரெசிபி

Image
சிக்கனை எப்போதும் ஒரே மாதிரி கிரேவி, மசாலா என்று செய்து அழுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பாசிப்பருப்பு சேர்த்து சமையுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையைத் தரும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.  சரி, இப்போது அந்த சிக்கன் தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  சிக்கன் - 250 கிராம் பச்சை  மிளகாய் - 2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை - சிறிது  தக்காளி - 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்ழுன்  உப்பு - தேவையான அளவு பாசிப்பருப்பு - 1/2 கப்  தண்ணீர் - 2-3 கப்  கொத்தமல்லி - சிறிது தாளிப்பதற்கு...  நெய் - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை:  முதலில் பாசிப்பருப்பைக் கழுவி நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். அதே சமயம் சிக்கனையும் சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.  பின்னர் ...

ஆரோக்கியம் தரும் வெந்தய குழம்பு செய்ய...!

Image
தேவையான பொருட்கள்: வெந்தயம் - 4 தேக்கரண்டி வரமிளகாய் - 4 மல்லி - 3 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 8 பல் புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு தேங்காய் துருவல் - அரை கப் கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு செய்முறை:  வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வரமிளகாய், மல்லி, சீரகம் இவை மூன்றையும் வறுத்து அரைக்கவும்.  தேங்காயை தனியாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் 6 தேக்கரண்டி ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். ஊற வைத்த வெந்தயத்தை வடிகட்டி வாணலியில் போட்டு வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து  வதக்கவும். அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதினை போட்டு வதக்கவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும். புளியை கரைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும். அடுப்பை குறைத்து வைத்து கொதிக்கவிடவும். எண்ணெய் தெளிந்தது மேலே  வந்தவுடன் இறக்கவும்.

தனிச்சுவை கொண்ட கிராமத்து வஞ்சிர மீன் குழம்பு செய்ய...

Image
மீன் குழம்பு என்றாலே மிகவும் சுவையாக இருக்கும், அதிலும் கிராமத்து மீன் குழம்பு என்றால் தனிச்சுவை கொண்டதாக  இருக்கும். தேவையான பொருட்கள்: மீன் - ½ கிலோ நல்லெண்ணெய் - தேவையான அளவு கடுகு - 1 டிஸ்பூன் சிறிய வெங்காயம் - 5 வெந்தயம் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - சிறிது புளி - 1 எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை: மீனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி வைத்து, புளியை ½ மணி நேரம்  தண்ணீர் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வரமிளகாய், தனியா, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொண்டு அதில் சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் போல செய்துக்  கொள்ள வேண்டும். சிறிய வெங்காயத்தை அரைத்து அதனுடன் ஊறவைத்திருந்த புளிச் சாற்றினைக் கலக்கவும். பின்பு வாணலில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், வெந்தயம்,  தக்காளி போட்டு தாளித்து, பச்சை மிளகாய் பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அரைத்து வைத்திருந்த பேஸ்ட் ...

வயிறு பிரச்சனைகளுக்கு சுகம் தரும் சுக்கு குழம்பு!!

Image
தேவையான பொருட்கள்:  சுக்கு - ஒரு சிறிய துண்டு  மிளகு - 2 டீஸ்பூன்  வெந்தயம் - ஒரு டீஸ்பூன்  கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு  சின்ன வெங்காயம் - 200 கிராம்  தக்காளி - 2  மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை:  * புளியை நன்றாக கரைத்து கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  * சின்ன வெங்காயம் சிறிது வதங்கியதும் இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் புளிக்கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.  * குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிந...

முருங்கைக்கீரை பொரிச்சகுழம்பு செய்ய...!

Image
தேவையானப்பொருட்கள்: முருங்கைக்கீரை - ஒரு கட்டு பயத்தம் பருப்பு - 1/2 கப் சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 2 தனியா - 1 டேபிள்ஸ்பூன் மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் தாளிக்க: எண்ணை - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக). செய்முறை: முருங்கைக்கீரையை உருவி, அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். முருங்கைக்கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீரைச்  சேர்த்து, 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விடவும்.  பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து, ஒரு கொதி வரும் வ...