Posts

Showing posts from July, 2017

நெத்திலி கருவாட்டு குழம்பு

Image
பலருக்கு மீன் குழம்பை விட கருவாட்டு குழம்பு தான் மிகவும் பிடிக்கும். ஏனெனில் மீன் குழம்பை விட, கருவாட்டு குழம்பு தான் மிகவும் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும். இங்கு கருவாட்டில் ஒரு வகையான நெத்திலி கருவாட்டைக் கொண்டு செய்யப்படும் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.  இது மிகவும் ஈஸியான செய்முறை. உங்களுக்கு கருவாட்டு குழம்பு செய்யத் தெரியாதெனில், இங்கு கொடுக்கப்பட்டுள்ள நெத்திரி கருவாட்டு குழம்பின் செய்முறையைப் படித்து, அதன்படி செய்து பாருங்கள். சரி, இப்போது அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்:  நெத்திலி கருவாடு - 1 கப் கத்திரிக்காய் - 3 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன்  சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்  மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்வ றுத்த அரிசி மாவு - 1 டீஸ்பூன்  வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) துருவிய தேங்காய் - 1/2 கப் புளி - 1 எலுமிச்சை அளவு கறிவேப்பிலை - சிறிது கடுகு - 1 டீஸ்பூன்  பூண்டு - 5 பற்கள் எண்ணெய் - 1/2 கப்  உப்பு - தேவையான அளவு ...

கொத்தவரங்காய் பொரியல்

Image
கொத்தவரங்காய் மிகவும் அருமையான சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு உணவுப் பொருள். ஆனால் கொத்தவரங்காய் பலருக்கு பிடிக்காது. அதற்கு அவர்கள் அதனை சரியாக சமைத்து சாப்பிடாததே காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் இதனை சரியாக சமைத்து சாப்பிட்டால், இதன் சுவைக்கு இணை எதுவும் வர முடியாது.  இங்கு அப்படி கொத்தவரங்காய் கொண்டு எப்படி பொரியல் செய்வதென்ற கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்:  கொத்தவரங்காய் - 1 1/2 கப் (நறுக்கியது)  கடலைப் பருப்பு - 1/8 கப் + 1 டேபிள் ஸ்பூன்  பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)  பூண்டு - 5-6 பற்கள்  மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்  மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்  சாம்பார் பொடி - 1/4 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு...  தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்  சோம்பு - 1/2 டீஸ்பூன்  பட்டை - 1 இன்ச்  கிராம்பு - 1  தாளிப்பதற்கு...  கடுகு - 1/2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்க றிவேப்பிலை - சிறிது  எண்ணெய் - 3 டீஸ்பூன் ...

காரமான... க்ரீன் சில்லி சிக்கன்

Image
குளிர்காலத்தில் எப்போதும் நன்கு காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி காரசாரமாக சாப்பிட அசைவ உணவுகளைத் தான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். உங்களுக்கு சிக்கன் பிடிக்குமெனில், பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் ரெசிபியை செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.  இது முற்றிலும் பச்சை மிளகாய் கொண்டு செய்வதால், இதன் சுவை வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.                                        தேவையான பொருட்கள்:  சிக்கன் - 1 கிலோ  பச்சை மிளகாய் - 1 கப் (சிறியது)  வெங்காயம் - 2 (நறுக்கியது)  பூண்டு - 10 பற்கள்  இஞ்சி - 1 துண்டு  கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)  உப்பு - தேவையான அளவு  மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 2 டீஸ்பூன்  வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்  கரம் மசாலா - 1 டீஸ்பூன்  சீரகம் - 1 டீஸ...

சுரைக்காய் பொரியல்

Image
கோடையில் சுரைக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே சுரைக்காயை பொரியல் செய்து கோடையில் சாப்பிடுவது மிகவும் நல்லது.  இங்கு சுரைக்காய் பொரியல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்:   சுரைக்காய் - 1 கப்  வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)  கடுகு - 1/4 டீஸ்பூன்  வரமிளகாய் - 1  கறிவேப்பிலை - சிறிது  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 1 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்  துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்  கொத்தமல்லி - சிறிது  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான  அளவு செய்முறை: முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.  பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர...

கீமா டிக்கி

Image
மட்டன் பிரியர்களே! வடஇந்திய ரெசிபியான கீமா டிக்கியை சுவைத்துள்ளீர்களா? இது ஒரு முகலாய் கீமா ரெசிபி. இது டெல்லி மற்றும் லக்னோவில் மிகவும் பிரபலமானது. மேலும் இந்த ரெசிபியானது மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. அதிலும் விடுமுறை நாட்களில் வீட்டில் செய்து சாப்பிட ஏற்றது. இங்கு அந்த கீமா டிக்கியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.  அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்:  மட்டன் கீமா - 750 கிராம்  வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)  பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)  பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)  கரம் மசாலா - 1 டீஸ்பூன்  மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்  சாட் மசாலா - 1 டீஸ்பூன்  கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) நெய் - 1 டேபிள் ஸ்பூன்  கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்  எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு  உப்பு - தேவையான அளவு செய்முறை:  முதலில் மட்டன் கீமாவை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் அதில் எண்ணெய் மற்றும் நெய் தரவி அனைத்து பொ...

முள்ளங்கி குடைமிளகாய் மசாலா

Image
மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு என்று சமைத்து போர் அடித்திருந்தால், இன்று முள்ளங்கி குடைமிளகாய் மசாலாவை செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த மசாலாவானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.  இங்கு முள்ளங்கி குடைமிளகாய் மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்:  முள்ளங்கி - 2 (நறுக்கியது)  குடைமிளகாய் - 1 (நறுக்கியது)  வெங்காயம் - 1 (நறுக்கியது)  தக்காளி - 1 (நறுக்கியது)  பச்சை மிளகாய் - 2  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்  சோம்பு - 1 டீஸ்பூன்  சீரகம் - 1 டீஸ்பூன்  மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்  மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கரைம் மசாலா - 1 டீஸ்பூன்  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  உப்பு - தேவையான  அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன்  அரைப்பதற்கு...  கசகசா - 1 டேபிள் ஸ்பூன்  முந்திரி - 10 செ...

முட்டை பிரட் மசாலா

Image
முட்டை பிரட் மசாலா என்பது அனைத்து வேளைகளிலும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் மிகவும் ஈஸியான ரெசிபி. அதிலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற பின், மிகவும் சோர்வுடன் இருந்தால், இந்த முட்டை பிரட் மசாலா செய்தாலே போதும். இதனை அப்படியே சாப்பிடலாம். முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த முட்டை பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்:  பிரட் - 8 துண்டுகள்  முட்டை - 4 மஞ்சள்  தூள் - 1 சிட்டிகை  மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்  சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்  தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)  பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)  கடுகு - 1/2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  எண்ணெய் - தேவையான அளவு  உப்பு - தேவையான அளவு செய்முறை:  முதலில் முட்டையை வேக வைத்து, தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாள...

சிம்பிளான... உருளைக்கிழங்கு ரோஸ்ட்

Image
உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அதிலும் அதனை ரோஸ்ட் செய்து சாம்பார் சாதத்துடன் சாப்பிட பலருக்கும் பிடிக்கும். உங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் உருளைக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள்.  ஏனெனில் இங்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட்டின் மிகவும் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)  பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)  கடுகு - 1 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை  மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்  எண்ணெய் - 1/4 கப் செய்முறை:  முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.  பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, ம...

ஹரியானா ஃபிஷ் மசாலா

Image
தேவையான பொருட்கள் வஞ்சரம் மீன் – நான்கு துண்டு மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப பச்சை மிளகாய் – ஒன்று புதினா – ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி – ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) லெமன் ஜூஸ் – ஒரு டீஸ்பூன் தயிர் – ஒரு டீஸ்பூன் ஆலீவ் ஆயில் – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – மூன்று டீஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது) கரம் மசாலா – அரை டீஸ்பூன் செய்முறை ஒரு கிண்ணத்தில் வஞ்சரம் மீன், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும். பின், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், லெமன் ஜூஸ், தயிர், ஆலீவ் ஆயில் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின், அதில் கரம் மசாலா, உப்பு, அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின், அதில் ஊறவைத்த மீன் சேர்த்து கலந்து எட்டு நிமிடம் சிம்மில் வைத்து நடுவில் கலந்து விட்டு, வெந்தவுடன் இறக்கவும்.

கடாய் பன்னீர்

Image
கடாய் பன்னீர் ஒரு சுவையான மற்றும் பிரபலமான வட இந்திய சைட் டிஷ் ஆகும். தேவையான பொருட்கள் எண்ணெய்  – இரண்டு தேகரண்டி நெய்  – ஒரு தேகரண்டி சீரகம்  – அரை ஸ்பூன் தணியா  – ஒரு ஸ்பூன் காய்ந்த மிளகாய் – மூன்று பட்டை – இரண்டு லவங்கம் – இரண்டு ஏலக்காய் – இரண்டு சின்ன வெங்காயம் – மூன்று இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன் தக்காளி – இரண்டு சக்கரை – இரண்டு சிட்டிக்கை மஞ்சள்தூள் – சிறிதளவு பன்னீர் – ஒரு கப் நறுக்கிய பெரிய வெங்காயம் – இரண்டு பச்சை மிளகாய் – இரண்டு அரைத்த தக்காளி விழுது – சிறிய தக்காளி இரண்டு உப்பு – தேவையான அளவு கடாய் மசாலா அரைக்க தேவையான பொருட்கள் தணியா – இரண்டு ஸ்பூன் சீரகம் – ஒரு ஸ்பூன் மிளகாய் உரித்தெடுத்து(விதைகள்) – இரண்டு ஸ்பூன் கடாய் மசாலா செய்முறை தணியா, சீரகம், மிளகாய் உரித்தெடுத்து மூன்றையும் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும் செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நெய் விட்டு, சீரகம், தணியா, காய்ந்த மிளகாய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்க...

காரமான மட்டன் மசாலா

Image
மழைப் பெய்யும் போது நன்கு காரமாக சாப்பிடத் தோன்றும். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு மட்டன் பிடிக்குமானால், அதனை மதிய வேளையில் மசாலா போன்று செய்து சுவையுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்து சுவைத்தால், இன்னும் அருமையாக இருக்கும். ஏனெனில் இந்த ரெசிபியில் மட்டனை நன்கு ஊற வைத்து பின் மசாலா போன்று செய்வதால், இது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். சரி, இப்போது அந்த காரமான மட்டன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா! தேவையான பொருட்கள்:  மட்டன் - 1/2 கிலோ  எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்  சோம்பு - 2 டீஸ்பூன்  வெங்காயம் - 1 (நறுக்கியது)  கறிவேப்பிலை - சிறிது  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்  பச்சை மிளகாய் - 2  தக்காளி - 2 (நறுக்கியது)  தண்ணீர் - 1/2 கப்  ஊற வைப்பதற்கு... தயிர் - 1 /2 கப் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்  மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்  சீரகப் பொடி - 1 டீஸ்பூன்  மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்  சரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் ...

பன்னீர் அவரைக்காய் குருமா

Image
ஒரு சுவையான, ருசியான மற்றும் எளிதாக செய்யக்கூடிய சைட் டிஷ். தேவையான பொருட்கள் பன்னீர் – அரை கப் அவரைக்காய் – அரை கப் பாதாம் – ஆறு (ஒரு மணி நேரம் ஊறவைத்து, விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும்) எண்ணெய் – தேவையான அளவு வெங்காயம் – நான்கு (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – நான்கு இஞ்சி – சிறு துண்டு பூண்டு – ஆறு கொத்தமல்லி – ஒரு கை பிரிஞ்சி இலை – ஒன்று பட்டை – இரண்டு லவங்கம் – இரண்டு ஏலக்காய் – இரண்டு தயிர் – கால் கப் (புளிக்காத தயிர்) செய்முறை தனியா தூள் – இரண்டு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். வறுத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பின், அரைத்த விழுது மற்றும் பாதாம் விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய அவரைக்காய், பன்னீர், தயிர், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி பத்து நிமிடம் கழித...

பிராந்தி சிக்கன் ரெசிபி

Image
சிக்கன் ரெசிபியில் வித்தியாசமாக ட்ரை பண்ண ஆசையா? அப்படியானால் பிராந்தி சிக்கன் ரெசிபியை முயற்சி செய்யுங்கள். அதெப்படி பிராந்தி கொண்டு சிக்கன் சமைப்பது என்று கேட்கிறீர்களா? உண்மையிலேயே பிராந்தி கொண்டு சிக்கன் செய்தால், சிக்கனின் சுவையானது மிகவும் சூப்பராக இருக்கும். குறிப்பா இந்த சிக்கன் ரெசிபியை பேச்சுலர்கள் முயற்சிக்கலாம். அந்த மாதிரி இது மிகவும் ஈஸியாக இருக்கும். இங்கு அந்த பிராந்தி சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்:  எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ (வேக வைத்துக் கொள்ளவும்) மைதா - 1 1/2 கப்  சிக்கன் பிராத் - 1 கப்  பிராந்தி - 1/4 கப்  வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்) ஆலிவ் ஆயில் - 4 டேபிள் ஸ்பூன்  கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)  மிளகு - 2 டேபிள் ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு செய்முறை:  முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் போட...

தவா பன்னீர் மசாலா

Image
இரவில் சப்பாத்தி சாப்பிடுபவரா? உங்களுக்கு பன்னீர் பிடிக்குமா? அப்படியெனில் இன்று ஓர் வித்தியாசமான சைடு டிஷ் செய்து சுவையுங்கள். அதுவும் 20 நிமிடத்தில் தயாராகக்கூடியவாறான ஓர் எளிய ரெசிபி. அது தான் தவா பன்னீர் மசாலா. மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த தவா பன்னீர் மசாலாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து இன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  பன்னீர் - 200 கிராம்  வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்  சீரகம் - 1 டீஸ்பூன்  வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)  இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)  பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)  பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)  குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)  தக்காளி - 2 (அரைத்தது)  மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்  பாவ் பாஜி மசாலா - 1 டேபிள் ஸ்பூன் (அல்லது)  கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன் +  மாங்காய் பொடி - 2 டீஸ்பூன் ...

பேச்சுலர் ரெசிபி: பெப்பர் குடைமிளகாய் சிக்கன்

Image
பேச்சுலர்களுக்கு எப்போதும் சிக்கன் மசாலா, சிக்கன் குழம்பு என்று செய்து போர் அடித்திருக்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை பேச்சுலர்களுக்காக மிகவும் சிம்பிளாக பெப்பர் குடைமிளகாய் சிக்கனை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது.  மேலும் இது சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். முக்கியமாக மதிய வேளையில் 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாகவும் இருக்கும். சரி, இப்போது பெப்பர் குடைமிளகாய் சிக்கனின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ  வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)  குடைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)  தயிர் - 2 டேபிள் ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்  கசகசா - 1 டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது) பிரியாணி இலை - 1 மிளகுத்  தூள் - 1 டேபிள் ஸ்பூன்  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்  மஞ்சள் தூள் - 1 சிட்டிகை  கொத்தமல்லி - சிறிது செய்முறை:  முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.  பின்னர் அதில் உப்ப...

கார்ன் குடைமிளகாய் கிரேவி

Image
இரவில் உங்கள் வீட்டில் சப்பாத்தியா? அதற்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்வீட் கார்ன் மற்றும் குடைமிளகாய் சேர்த்து கிரேவி செய்து சுவையுங்கள்.  இங்கு கார்ன் குடைமிளகாய் கிரேவியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  ஸ்வீட் கார்ன் - 1 கப் (வேக வைத்தது)  குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)  பெரிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்  பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்  மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்  மல்லித் தூள் - 1 டீஸ்பூன  கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்த க்காளி சாஸ் - 1 டீஸ்பூன்  கொத்தமல்லி - சிறிது  எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்  எண்ணெய் - 3 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  வறுத்து அரைப்பதற்கு... பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)  தக்காளி - 2 (நறுக்கியது)  பூண்ட...

வஞ்சரம் மீன் குழம்பு

Image
மீன்களில் பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மீனையும் சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால் தான் அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும். அதில் இப்போது பார்க்கப்போவது, வஞ்சரம் மீன் குழம்பைப் பற்றி தான். வஞ்சரம் மீனை குழம்பு, ப்ரை என்று எப்படி செய்து சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும். இப்போது அவற்றில் வஞ்சரம் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்:  வஞ்சரம் மீன் - 1/2 கிலோ  சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)  பூண்டு - 100 கிராம் (நறுக்கியது)  தக்காளி - 1/4 கிலோ (நறுக்கியது)  புளி - 1 நெல்லிக்காய் அளவு  மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்  மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்  மல்லித் தூள் - 2 டீஸ்பூன்  நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன்  சீரகம் - 1/4 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  கறிவேப்பிலை - சிறிது  கொத்தமல்லி - சிறிது  செய்முறை:  முதலில் மீனை சுத்தம் செய்து, நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.  பின்னர் புளிய...

ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு

Image
இதுவரை எத்தனையோ ஸ்டைலில் குழம்பு வைத்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் பலரும் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு ஸ்டைல் தான் ஐயங்கார் ஸ்டைல் உணவுகள். ஏனெனில் இந்த ஸ்டைல் உணவுகளின் சுவையே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு அந்த ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதனை உங்கள் வீட்டில் செய்து சமைத்துப் பாருங்கள். நிச்சயம் இது உங்களின் விருப்பமான குழம்புகளில் ஒன்றாக இருக்கும். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 10 (நறுக்கியது)  கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)  புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு  எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  வறுத்து அரைப்பதற்கு...  மல்லி - 1 டேபிள் ஸ்பூன்  வெந்தயம் - 1 டீஸ்பூன்  துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  வரமிளகாய் - 5  எண்ணெய் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு...  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  வெந்தயம் - 1/2 டீஸ்பூன்  துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்  உளுத்தம் ப...

ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா முட்டை குழம்பு

Image
ஆந்திரா சமையல் அனைத்தும் மிகவும் காரமாக இருந்தாலும், ருசியாக இருக்கும். அப்படி ஆந்திராவில் பிரபலமான ஓர் ரெசிபி தான் கோங்குரா முட்டை குழம்பு. இது சற்று புளிப்பாக இருந்தாலும், சுவையாக இருக்கும். இங்கு ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா முட்டை குழம்பு ரெசிபியின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  கோங்குரா/புளிச்சக் கீரை - 1 கட்டு  எண்ணெய் - 3 டீஸ்பூன  பச்சை மிளகாய் - 3  உப்பு - தேவையான அளவு  வெங்காயம் - 1 (நறுக்கியது)  கறிவேப்பிலை - சிறிது  மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்  தண்ணீர் - 1 கப்  மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்  மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்  கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்  முட்டை - 2 (வேக வைத்தது) செய்முறை:  முதலில் புளிச்சக்கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ளவும்.  பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ...

பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ்

Image
மாலையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஏதேனும் சமைத்துக் கொடுக்க நினைத்தால், பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் செய்து கொடுங்கள். இது நிச்சயம் குழந்தைகளுக்கு ஓர் ஆரோக்கியமான ரெசிபியாக இருக்கும். மேலும் இது அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  நூடுல்ஸ் - 1 பாக்கெட்  பேபி கார்ன் - 1/2 கப் (ஓரளவு நீளமாக வெட்டியது)  கேரட் மற்றும் முட்டைக்கோஸ் - 1 கப் (நறுக்கியது)  குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது)  பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)  வெள்ளை வினிகர் - 1/2 டீஸ்பூன்  சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்  ஸ்பிரிங் ஆனியன் - சிறிது மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்  ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்  சர்க்கரை - 1/2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு செய்முறை:  முதலில் ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற...

மட்டன் லிவர் மசாலா

Image
ஆட்டு ஈரல் உடலில் இரத்த அணுக்களின் உற்பத்திக்கு சிறந்த ஒன்று. இத்தகைய ஆட்டு ஈரலை வாங்கி வாரத்திற்கு ஒருமுறை மசாலா செய்து வளரும் குழந்தைகளுக்கு மற்றும் இரத்த சோகை உள்ளவர்களுக்கு கொடுப்பது நல்லது. உங்களுக்கு மட்டன் லிவர் மசாலா எப்படி செய்வதென்று தெரியுமா? இங்கு மட்டல் லிவர் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  மட்டன் லிவர்/ஈரல் - 500 கிராம் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  மஞ்சள் தூள் - 1 சிட்டிகை  தேங்காய் பொடி - 1 டீஸ்பூன்  மல்லித் தூள் - 1 டீஸ்பூன்வெ ங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) கிராம்பு - 2  ஏலக்காய் - 2  பட்டை - 1  எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை - 1 கொத்தமல்லி - சிறிது தண்ணீர் - தேவையான அளவு செய்முறை:  முதலில் ஈரலை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பால் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒ...

உருளைக்கிழங்கு தேங்காய் பால் வறுவல்l

Image
உங்கள் வீட்டில் கத்திரிக்காய், முருங்கைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சாம்பார் வைக்காமல், சற்று வித்தியாசமாக பொரியல் செய்து சுவைத்துப் பாருங்கள். அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சுவைத்தால் அற்புதமாக இருக்கும். சரி, இப்போது அந்த முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியலை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  வெங்காயம் - 1 (நறுக்கியது)  தக்காளி - 1 (நறுக்கியது)  முருங்கைக்காய் - 1 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்)  கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)  மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கடுகு - 1 டீஸ்பூன்  எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.  பின் வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 10 ந...

வெண்டைக்காய் புளிக்குழம்பு

Image
வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். அதிலும் அதனை தேங்காய் சேர்த்து புளிக்குழம்பு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இங்கு தேங்காய் சேர்த்து வெண்டைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  வெண்டைக்காய் - 10-15 (துண்டுகளாக்கப்பட்டது)  சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது)  தக்காளி - 1 (நறுக்கியது)  பூண்டு - 6 பற்கள்  புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன் (எலுமிச்சை அளவு புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)  உப்பு - தேவையான அளவு  சர்க்கரை - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு...  கடுகு - 1 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  வரமிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிது  நல்லெண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன் வறுத்து அரைப்பதற்கு... ...

ப்ராக்கோலி பெப்பர் ப்ரை

Image
காலிஃப்ளவர் போன்று ஆனால் பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பலருக்கு எப்படி சமைத்து சாப்பிட வேண்டுமென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக ப்ராக்கோலியை எப்படி சுவையான முறையில் சமைத்து சாப்பிடுவதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இங்கு ப்ராக்கோலி பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த ப்ராக்கோலி பெப்பர் ப்ரை ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்ததென்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தேவையான பொருட்கள்:  ப்ராக்கோலி - 1 (சிறியது மற்றும் துண்டுகளாக்கப்பட்டது)  உப்பு - 1/2 டீஸ்பூன்  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்  ப்ரை செய்வதற்கு...  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)  கறிவேப்பிலை - சிறிது  பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)  வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)  மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு செய்முறை:  முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ண...

சிம்பிளான... நாட்டுக் கோழி குழம்பு

Image
பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட, நாட்டுக் கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு தேங்காய் சேர்க்காமல் சுவையான நாட்டுக் கோழி குழம்பு வேண்டுமானால், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு சமைத்து சாப்பிடுங்கள். சரி, இப்போது நாட்டுக் கோழி குழம்பின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தேவையான பொருட்கள்:  நாட்டுக் கோழி - 1 கிலோ  வெங்காயம் - 3 (நறுக்கியது)  தக்காளி - 3 (நறுக்கியது)  சிக்கன் மசாலா பவுடர் - 50 கிராம்  தண்ணீர் - தேவையான அளவு  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்  கொத்தமல்லி - சிறிது சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்  பட்டை - 2 செ.மீ  இஞ்சி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)  பூண்டு - 10 பற்கள் செய்முறை:   முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத...

ஹக்கா மஸ்ரூம்

Image
எப்போதும் பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் போன்றவற்றைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் காளானைக் கொண்டு ஆரோக்கியமான மற்றும் வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்து சுவையுங்கள்.  இந்த டிஷ்ஷின் பெயர் ஹக்கா மஸ்ரூம். சரி, இப்போது அந்த ஹக்கா மஸ்ரூமை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  காளான் - 2 கப் (நறுக்கியது)  வெங்காயத்தாள் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)  சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்  சோயா சாஸ் - 2 1/2 டேபிள் ஸ்பூன்  மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)  பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது)  எண்ணெய் - 1 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு செய்முறை:  முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் சோள மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.  பின்னர் அதில் சோயா சாஸ் சேர்த்து கலந்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.  பின்பு ஒரு நான்ஸ்டிக...

பேச்சுலர் சாம்பார்

Image
இதுவரை நீங்கள் பருப்பு சேர்த்து தான் சாம்பார் செய்திருப்பீர்கள். ஆனால் பருப்பு சேர்க்காமல் சாம்பார் செய்து சுவைத்ததுண்டா? ஆம், பருப்பு சேர்க்காமல் கூட சாம்பார் செய்யலாம். இதனை பேச்சுலர் சாம்பார் என்று சொல்லலாம். இம்மாதிரியான சாம்பார் வீட்டில் பருப்பு தீர்ந்துவிட்டால் வைக்க உதவும். மேலும் இது பேச்சுலர்களுக்கு ஏற்ற ஓர் அற்புதமான ரெசிபி. சரி, இப்போது அந்த பேச்சுலர் சாம்பரை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  கடுகு - 1/2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்  பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை  கறிவேப்பிலை - சிறிது  வெங்காயம் - 1 (நறுக்கியது)  பச்சை மிளகாய - 1 (நீளமாக கீறியது)  தக்காளி - 2 (நறுக்கியது)  சாம்பார் பவுடர் - 2-3 டேபிள் ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  சர்க்கரை - 1/2 டீஸ்பூன்  தண்ணீர் - தேவையான அளவு  கொத்தமல்லி - சிறிது செய்முறை:  முதலில் ஒரு வாணலியை அடுப்பி...