காரசாரமான... குட்டநாடன் மீன் குழம்பு
ஆந்திராவைப் போலவே கேரள உணவுகளும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் கேரளாவில் மீன் குழம்பு தான் மிகவும் பிரபலமானது. அதிலும் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம். சரி, இப்போது அந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: மீன் - 1 கிலோ புளி (குடம்புளி) - 4 துண்டுகள் உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது) பூண்டு - 6-7 (நறுக்கியது) இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது) காஷ்மீரி மிளகாய் தூள் - 1-2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் செய்முறை: முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குட...