வயிறு பிரச்சனைகளுக்கு சுகம் தரும் சுக்கு குழம்பு!!

தேவையான பொருட்கள்: 


சுக்கு - ஒரு சிறிய துண்டு 
மிளகு - 2 டீஸ்பூன் 
வெந்தயம் - ஒரு டீஸ்பூன் 
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன் 
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு 
சின்ன வெங்காயம் - 200 கிராம் 
தக்காளி - 2 
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: 


* புளியை நன்றாக கரைத்து கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

* சின்ன வெங்காயம் சிறிது வதங்கியதும் இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் புளிக்கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். 

* குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும்  இறக்கவும். சுவையானன சுக்கு குழம்பு தயார்.

Comments

Popular posts from this blog

பீன்ஸ் உசிலி செய்ய தெரிந்து கொள்வோம்....

ஆரோக்கியம் தரும் வெந்தய குழம்பு செய்ய...!

பூசணிக்காய் கூட்டு செய்ய வேண்டுமா....!