செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு
செட்டிநாடு ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் செட்டிநாடு ஸ்டைல் அசைவ உணவுகள் என்றால் நன்கு மணத்துடனும், காரமாகவும் இருக்கும். உங்களுக்கு இறால் பிடிக்குமா? அப்படியெனில் செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பை எப்படி செய்வதென்று தெரியுமா? இங்கு செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது) வறுத்து அரைப்பதற்கு... மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 2-4 சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் குழம்பிற்கு... எண்ணெய் - 1/4 கப் கடுகு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது) தக்காளி - 2 (நறு...